தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். அறிமுகமான முதல் படத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் சாதித்து காட்டியவர் சசிகுமார். அந்த படம் தான் ‘சுப்ரமணியபுரம்’. அதன் பிறகு ‘ஈசன்’ படத்தை இயக்கினாலும், ‘நாடோடிகள்’ என்ற படம் ஹீரோ சசிகுமாருக்கு அதிக லைக்ஸை பெற்று தந்தது. ‘நாடோடிகள்’ ஹிட்டிற்கு பிறகு நடிகர் சசிகுமாருக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சசிகுமார் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இப்படம் 1983-யில் கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்காம்.
இதில் பாக்யராஜ் ரோலில் சசிகுமாரும், ஊர்வசி ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளனர். கே.பாக்யராஜே கதை-திரைக்கதை-வசனம் எழுதியுள்ள இப்படத்தின் இயக்குநர் யார்? என விரைவில் அறிவிக்கவுள்ளனர். ஒரிஜினல் வெர்ஷனில் நடிகை தீபா முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது, ரீமேக் வெர்ஷனில் தீபா ரோலில் நடிக்க ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகைகள் யாஷிகா ஆனந்த் மற்றும் ரைசா வில்சன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.