சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஓவியா. இவருக்கு அமைந்த முதல் படமே மலையாள திரையுலகில் தான். அது தான் ‘கங்காரு’. ப்ரித்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராஜ் பாபு இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘புதிய முகம்’ படத்திலும் நடித்தார் ஓவியா.
பின், ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் ‘நாளை நமதே’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்துக்கு பிறகு விமலுக்கு ஜோடியாக நடித்த படம் தான் ஓவியாவின் நடிப்புக்கு லைக்ஸ் போடும் வகையில் அமைந்தது. அது தான் ‘களவாணி’. ‘களவாணி’ படத்தின் வெற்றியால் நடிகை ஓவியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மன்மதன் அம்பு, மெரினா, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், முத்துக்கு முத்தாக, மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே, சண்டமாருதம், 144, புலிவால், ஹலோ நான் பேய் பேசுறேன், கலகலப்பு, சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 ml, கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, ஓவியாவ விட்டா யாரு. களவாணி 2’ என படங்கள் குவிந்தது.
பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது நடிகை ஓவியா நடிப்பில் ‘சம்பவம், ராஜபீமா’ என இரண்டு தமிழ் மொழி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஓவியாவின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி என தகவல் கிடைத்துள்ளது.