நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்திய ‘பிக் பாஸ்’ ரைசா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • April 28, 2022 / 10:33 AM IST

‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா, FIR’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ், பொய்க்கால் குதிரை’ என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் 2020-ஆம் ஆண்டு ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். ‘#லவ்’ படத்தை பாஸ்கோ இயக்க, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மூலம் ஃபேமஸான வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

‘காதலிக்க யாருமில்லை’ படத்தை கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்க, முக்கிய ரோலில் லைலா நடிக்கிறார். ‘பொய்க்கால் குதிரை’ படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்க, பிரபு தேவா ஹீரோவாக நடிக்கிறார். தற்போது, ரைசா வில்சன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீருக்கு அடியில் எடுத்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus