ஆரம்பத்தில் ‘நியூஸ் 7’ சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு சன் டிவியில் நியூஸ் வாசிக்க என்ட்ரியானார். அங்கு பல வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
அனிதா சம்பத்திற்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ‘2.0, சர்கார், காப்பான், மாஸ்டர்’ போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அனிதா. அதன் பிறகு அனிதா சம்பத்திற்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.
சமீபத்தில், அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் “பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க” என்று கமென்ட் போட்டிருக்கிறார். இந்த கமென்டிற்கு 13 பேர் லைக்ஸ் போட்டிருந்தனர். இதற்கு அனிதா சம்பத் “உன்ன யாரோ இப்படி சொல்லியிருக்காங்க போல, அதான் இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டுக்குற. உனக்கு லைக் போட்டவனும் எங்கையோ செமையா அடி வாங்கியிருப்பான் போல” என்று பதிலடி கொடுத்துள்ளார்.