‘பிக் பாஸ்’ அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை… ஷாக்கான ரசிகர்கள்!

  • July 10, 2021 / 02:30 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சி தான் அர்ச்சனா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி. அதன் பிறகு சன் டிவியில் ‘இளமை புதுமை’, விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம்’, கலைஞர் டிவியில் ‘வீடு மனைவி மக்கள்’, புதுயுகம் டிவியில் ‘Celebrity Kitchen’, ஜீ தமிழில் ‘அதிர்ஷ்ட லக்ஷ்மி, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 1 & 2, சரிகமப சீனியர்ஸ் சீசன் 1 & 2’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மேலும், ‘என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், ஏண்டா தலையில எண்ண வெக்கல, நான் சிரித்தால்’ போன்ற திரைப்படங்களிலும் அர்ச்சனா நடித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அர்ச்சனா. இவர்களுக்கு சாரா என்ற மகள் உள்ளார். சமீபத்தில், அர்ச்சனாவுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

Bigg Boss Archana Undergoes Skull Surgery1

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தற்போது, அர்ச்சனா முக்கிய ரோலில் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மூளைக்கு அருகில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இன்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அர்ச்சனாவே இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus