‘பிக் பாஸ்’ அர்ச்சனாவின் மகள் சாராவா இது?…. லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!
October 30, 2021 / 08:27 PM IST
|Follow Us
சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சி தான் அர்ச்சனா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி. அதன் பிறகு சன் டிவியில் ‘இளமை புதுமை’, விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம்’, கலைஞர் டிவியில் ‘வீடு மனைவி மக்கள்’, புதுயுகம் டிவியில் ‘Celebrity Kitchen’, ஜீ தமிழில் ‘அதிர்ஷ்ட லக்ஷ்மி, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 1 & 2, சரிகமப சீனியர்ஸ் சீசன் 1 & 2’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மேலும், ‘என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், ஏண்டா தலையில எண்ண வெக்கல, நான் சிரித்தால்’ போன்ற திரைப்படங்களிலும் அர்ச்சனா நடித்துள்ளார். 2004-ஆம் ஆண்டு வினீத் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அர்ச்சனா. இவர்களுக்கு சாரா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு (2020) அர்ச்சனாவுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. சமீபத்தில், அர்ச்சனாவும், அவரது மகள் சாராவும் இணைந்து நடித்த ‘டாக்டர்’ படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது, சாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.