‘பிக் பாஸ்’ ஷிவானியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. கேக் ஊட்டி விட்ட பாலாஜி!

  • May 6, 2021 / 01:49 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு சமீபத்தில் அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

இந்நிலையில், நேற்று (மே 5-ஆம் தேதி) நடிகை ஷிவானி நாராயணனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, ஷிவானி பர்த்டே கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. அப்போது, ‘பிக் பாஸ் 4’யின் இன்னொரு போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் தான் ஷிவானிக்கு கேக் ஊட்டி விடுகிறார்.

1

2

3

4

5

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus