‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

  • March 24, 2023 / 06:43 PM IST

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸானவர் லாஸ்லியா. இவர் ‘கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்தார். இதில் ‘பிரண்ட்ஷிப்’ படம் 2021-ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸானது.

இதனை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் – ஷாம் சூர்யா இணைந்து இயக்கியிருந்தனர். இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இன்னொரு படமான ‘கூகுள் குட்டப்பா’வை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்கியிருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன், யோகி பாபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 23-ஆம் தேதி) நடிகை லாஸ்லியாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus