தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை இந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 6-ஆம் தேதி) முதல் இந்த படத்தில் இடம்பெறும் விஜய்யின் இன்ட்ரோ சாங்கை 2000 டான்ஸர்களை வைத்து ஷூட் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இப்பாடல் காட்சிக்காக சென்னையிலுள்ள ஆதித்யா ராம் ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டிருக்கிறதாம். அனிருத் – ‘பிக் பாஸ்’ அசல் கோளாறு இணைந்து பாடிய இந்த பாடலுக்கு தினேஷ் நடனம் அமைக்கிறார்.