திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘பிக் பாஸ்’ ஜி.பி.முத்து… தீயாய் பரவும் புகைப்படம்!

  • April 15, 2023 / 03:44 PM IST

திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே ‘டிக் டாக்’ மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் ஜி.பி.முத்து. டிக் டாக் மற்றும் யூடியூபில் தொடர்ந்து செம ஃபன்னான வீடியோக்களை ஷேரிட்டு வந்ததால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

கடந்த ஆண்டு (2022) ஜி.பி.முத்துவிற்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. ஆனால், இவர் இந்த ஷோவிலிருந்து இரண்டே வாரங்களில் சில காரணங்களால் வெளியேறி விட்டார்.

இதனைத் தொடர்ந்து சன்னி லியோனியின் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்போது ஜி.பி.முத்து தமிழில் வெற்றியின் ‘பம்பர்’ உட்பட ஐந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஜி.பி.முத்து திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஜி.பி.முத்துவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் எடுத்த புகைப்படத்தை ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus