சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் அமலா பால் தான். அது தான் ‘சிந்து சமவெளி’. இயக்குநர் சாமி இயக்கியிருந்த ‘சிந்து சமவெளி’ படத்துக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசட தபற, ஓ மணப்பெண்ணே’, தெலுங்கு மொழியில் ‘ஜெய் ஸ்ரீராம், காதலி, ஜெர்சி’ என படங்கள் குவிந்தது.
இப்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘நூறு கோடி வானவில், டீசல்’ என இரண்டு
படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.