‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஜூலி!

  • December 20, 2021 / 05:46 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-யில் போட்டியாளராக இருந்தவர் ஜூலி. இவர் ‘பிக் பாஸ்’-யில் கலந்து கொள்வதற்கு முன்பே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஃபேமஸானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ;’பிக் பாஸ்’ ஜூலி ஹீரோயினாக அவதாரம் எடுத்து விட்டார். இப்போது ஜூலி நடிப்பில் ‘அம்மன் தாயி’ மற்றும் ‘Dr.S.அனிதா MBBS’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஜூலி ‘ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ஜூலியின் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது. இப்பாடல் ‘புஷ்பா’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் ரிலீஸான இப்படத்தில் சமந்தா அப்பாடலுக்கு நடனமாடியிருந்தார். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

 

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus