‘பிக் பாஸ்’ கவினுக்கு திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

  • August 2, 2023 / 03:07 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கவின். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ (காலேஜ் வெர்ஷன்), ‘தாயுமானவன்’, ‘சரவணன் மீனாட்சி’ ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தார். பின், ‘பிக் பாஸ்’ சீசன் 3-யிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

கவின் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘நட்புனா என்னான்னு தெரியுமா’. இந்த படத்திற்கு பிறகு ‘லிப்ட், டாடா’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் ‘டாடா’ திரைப்படம் இந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இப்போது கவின் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கவின் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்ததாகவும், வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus