‘விஜய் 65’ படத்தில் நடிக்கிறாரா ‘பிக் பாஸ்’ கவின்?… படக்குழுவினர் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!

  • April 1, 2021 / 07:01 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே. இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்தது. நேற்று (மார்ச் 31-ஆம் தேதி) இப்படத்துக்கான பூஜை போடப்பட்டது.

இந்த பூஜையில் ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகர் கவினும் கலந்து கொண்டார். ஆகையால், கவின் இதில் முக்கிய ரோலில் நடிக்கிறார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரிக்கையில் “கவின் இந்த படத்தில் நெல்சனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற உள்ளார். அவர் இதில் நடிப்பது குறித்து எந்த ஒரு முடிவும் இப்போது வரை எடுக்கவில்லை” என்று கூறியுள்ளனர். ஏற்கனவே, நெல்சன் இயக்கி ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்திலும் கவின் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus