‘ஜோக்கர்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ‘ஆண் தேவதை’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். 2020-ஆம் ஆண்டு நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ சீசன் 4 என்ட்ரி.
கடைசியாக ரம்யா பாண்டியன் தமிழில் நடித்த படம் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. இந்த படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தயாரித்திருந்தார். இதனை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கியிருந்தார். இதில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து பாப்புலர் நடிகை வாணி போஜனும் நடித்திருந்தார்.
நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இப்போது ரம்யா பாண்டியன் ‘இடும்பன்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.