சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பிக் பாஸ்’ புகழ் ரியோ ராஜ். இவர் ஹீரோவாக நடித்த ‘ஜோ’ படம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதாபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ராகுல்.கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வருண்.கே.ஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘விஷன் சினிமா ஹவுஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.