‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • July 20, 2023 / 10:36 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ‘காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, பஹீரா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வால் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், புரவி, கெஸ்ட் : சேப்டர் 2, குறுக்கு வழி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை 20-ஆம் தேதி) சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இவர் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus