செம்ம குத்தாட்டம் போட்ட ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

  • March 7, 2023 / 04:54 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ‘காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா, நான் கடவுள் இல்லை, பஹீரா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வால் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், புரவி, தி நைட், கெஸ்ட் : சேப்டர் 2, குறுக்கு வழி’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் செம்ம குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார் சாக்ஷி.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus