விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான முதல் ப்ரோமோவை வெளியிட்டது.
நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த முதல் ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த ரியாலிட்டி ஷோவில் ஷிவானி நாராயணன், அனு மோகன், பூனம் பாஜ்வா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, கோபிநாத், ரம்யா பாண்டியன், புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண், வித்யுலேகா ராமன் ஆகியோர் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
"தப்புன்னா தட்டி கேட்பேன்..
நல்லதுன்னா தட்டி குடுப்பேன்.. #BiggBossTamil Season 4 | விரைவில்.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #KamalHassan #பிக்பாஸ்" #VijayTelevision pic.twitter.com/XPaxySHx9E— Vijay Television (@vijaytelevision) September 5, 2020