ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் பேரழகாய் மின்னும் ‘பிக் பாஸ்’ சனம் ஷெட்டி!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருப்பவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே ‘அம்புலி’. அதன் பிறகு சனம் ஷெட்டியின் கால்ஷீட் டைரியில் ‘கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, வால்டர்’ என படங்கள் குவிந்தது. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

‘பிக் பாஸ்’ சீசன் 3-யில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் – சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு (2020) சனம் ஷெட்டிக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ் 4’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

இப்போது, சனம் ஷெட்டி நடிப்பில் ‘மஹா, எதிர் வினையாற்று’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

 

Share.