கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ்’ சீசன் 6… எந்த தேதியிலிருந்து துவங்கப்போகுது தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை சில நாட்கள் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.

பின், கமல் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியானதால் அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் தான் டைட்டில் வின்னர் என்றும், நிரூப் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போது, ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. கமல் தொகுத்து வழங்கப்போகும் இந்த சீசன் 6-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறதாம். இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share.