வெறித்தனமாக பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் வீடியோ!

  • February 14, 2024 / 12:14 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ சீசன் 4 என்ட்ரி.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

2022-ஆம் ஆண்டு வெளியான கமல் ஹாசனின் ‘விக்ரம்’, விஜய் சேதுபதியின் ‘DSP’, வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, கடந்த ஆண்டு (2023) வெளியான வெற்றியின் ‘பம்பர்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஷிவானி. தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோவை வெளியிட்டுள்ளார். ஷிவானி கிக் பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கும் இந்த வீடியோ பதிவு ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus