ஹூப் டான்ஸ் ஆடி அசத்திய ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

  • September 13, 2023 / 06:58 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ சீசன் 4 என்ட்ரி.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

கடந்த ஆண்டு (2022) வெளியான கமல் ஹாசனின் ‘விக்ரம்’, விஜய் சேதுபதியின் ‘DSP’, வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, இந்த ஆண்டு (2023) வெளியான வெற்றியின் ‘பம்பர்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஷிவானி. தற்போது, இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில் வளையத்தை வைத்து ஹூப் டான்ஸ் ஆடியிருக்கிறார் ஷிவானி.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus