Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ்’ சீசன் 7-ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா… ரன்னர் அப் யார் தெரியுமா?

  • January 15, 2024 / 10:26 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7 கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஷன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயக்குமார், ஜோவிகா விஜயக்குமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய், தினேஷ் கோபால்சாமி, அன்னபாரதி, அர்ச்சனா, RJ ப்ராவோ, கானா பாலா ஆகிய 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

நேற்றைய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டில் வின்னர் என்றும், மணிச்சந்திரா ரன்னர் அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus