“4-வது திருமணம் செய்து கொண்டேனா?”… ட்விட்டரில் விளக்கமளித்த ‘பிக் பாஸ்’ வனிதா!
June 10, 2021 / 03:02 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. அது தான் ‘சந்திரலேகா’. இந்த படத்துக்கு பிறகு நடிகை வனிதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
வனிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது, வனிதா விஜயகுமார் நடிப்பில் நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் வடஇந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை 4-வது திருமணம் செய்து கொண்டார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது தொடர்பாக வனிதா ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.
Just to let you guys know…am very much single and available..😉.. staying that way…dont spread any rumours nor believe them..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 9, 2021
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.