மெகா ஹிட்டான த்ரில்லர் படம்… ரீமேக்கில் ஒப்பந்தமான ‘பிக் பாஸ்’ வனிதா!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஹிந்தி திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே, ஜாகிர் ஹூசைன், அணில் தவான், அஷ்வினி கல்சேகர், மனவ் விஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஹிந்தியில் மெகா ஹிட்டானது. சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ என டைட்டில் சூட்டப்பட்டது.

தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக அவரது மகன் பிரஷாந்த் நடித்து வருகிறார். நேற்று (மார்ச் 10-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தில் முக்கிய ரோலில் ‘பிக் பாஸ் 3’ மூலம் ஃபேமஸான வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை வனிதாவே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Share.