நம்ம ‘பிக் பாஸ்’ வனிதாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

  • August 31, 2021 / 03:11 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. அது தான் ‘சந்திரலேகா’. இந்த படத்துக்கு பிறகு நடிகை வனிதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

வனிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா.

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, வனிதா விஜயகுமார் நடிப்பில் ஆறு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus