“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

  • July 17, 2023 / 07:37 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தித் தொடர்பாளர் விக்ரமன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சீரியலில் நடித்தார். பின், அதே சேனலில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6-யிலும் கலந்து கொண்டார்.

தற்போது, லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருபா முனுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிக் பாஸ்’ விக்ரமன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொல்லி பணம் வாங்கியதாகவும், அவர் இன்னும் 15 பெண்களையும், சில ஆண்களையும் இதுபோல் ஏமாற்றியிருக்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கிருபா முனுசாமி அவருக்கு எழுதிய காதல் கடிதத்தையும், அவரிடம் இவர் வாங்கிய பணத்தை கொடுத்ததற்கான ஆதாரத்தையும் ஷேர் செய்துள்ளார். மேலும், கிருபா கூறியிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறேன் என்றும் விக்ரமன் பதிவிட்டிருக்கிறார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus