பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அனிதா நீக்கப்படுவாரா?- அவர் கணவரின் பதிவு!

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்” என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் 16 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகை சிவானி நாராயணன், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா, நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை சமயுக்தா கார்த்திக், நடிகை ரம்யா பாண்டியன, சூப்பர் சிங்கர் ஆஜித் உள்ளிட்ட 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில் சிலர் எலிமினிட் ஆனது தவிர தற்போது அர்ச்சனா, சனம், ரம்யா பாண்டியன், சிவானி, கேப்ரில்லா, அனிதா, நிஷா, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ஆரி, சோம்சேகர், பாலா மற்றும் அஜித் ஆகியோர் இருக்கிறார்கள்.

தற்போது இந்த வாரம் அனிதா சம்பத் எவிக்ஷன் பிராஸில் இருப்பார் என்று பலர் ஊகித்து வரும் நிலையில், அவரது கணவர் அவரை மிஸ் பண்ணுவதாக போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கண்டிப்பாக இவர்தான் எவிக்ஷன் செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் அவரே நான் அனிதா வருகிறார் என்பதற்காக இந்த போஸ்டை வெளியிடவில்லை. அதனால் அவர் எவிக்ஷன் செய்யப்படுவார் என்பது உறுதி இல்லை என்று கூறி குழப்பமடைய செய்துள்ளார்.

Share.