பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இருக்கும் வீட்டில் போட்டியாளராக உள்ளே இருக்கிறார்.
தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹான்டில் செய்துவரும் இவரது கணவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அனிதா ஏழு வருடமாக செய்தி வாசிப்பாளராக இருந்ததாகவும் எந்த ஒரு வாய்ப்புக்காகவும் இந்தத் தொழிலை விட்டுக்கொடுக்கவில்லை என்றும் தற்போது ஒரு சின்ன மாற்றம் தேவைப்படுவதாலும் நடிகர் கமலுடன் அங்கு நிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகவும் தற்போது தனது தொழிலை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இந்த நேரத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கணவர் தான் பார்த்துக் கொள்கிறாராம். இவரின் இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் தங்கள் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.