பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தையின் திடீர் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!
November 16, 2020 / 12:14 PM IST
|Follow Us
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்கள் பட்டியல் ஏராளம். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமான ஒருவர்தான் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். மாடலிங் துறையில் ஜொலித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிவி ஆங்கரிங் செய்ய தொடங்கினார்.
தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் கதவை தட்டி வருகிறது. இந்நிலையில் லாக்டவுனில் மற்ற நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது நடிகர் கவினை இவர் காதலித்ததும், இவர் தந்தை உள்ளே வந்து கண்டித்த பிறகு இந்த காதலை அவர் கைவிட்டதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்நிலையில் தற்போது திடீரென லாஸ்லியாவின் தந்தை உடல் நலம் சரியில்லாமல் காலமானதாக தகவல் வந்துள்ளது. இதற்கு லாஸ்லியா ரசிகர்கள் தங்களது மிகுந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை லாஸ்லியாவும் இந்த செய்தி உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் பலரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருக்கிறார்கள்.