பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவுக்கு திருமணமா ?- வைரலாகும் செய்தி!

  • October 30, 2020 / 09:19 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்கள் பட்டியல் ஏராளம். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமான ஒருவர்தான் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். மாடலிங் துறையில் ஜொலித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிவி ஆங்கரிங் செய்ய தொடங்கினார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் கதவை தட்டி வருகிறது. இந்நிலையில் லாக்டவுனில் மற்ற நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவது போன்று இவரும் போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு மறைமுகமாக கவினை தாக்கியும் வருகிறார். நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது காதலித்தார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

வெளியே வந்ததும் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இதனால் தான் அவர் தனது கேப்ஷனில் அவரைத் தாக்கி வருவதாகவும் ரசிகர்கள் கோவமாக உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியாவின் தந்தையின் நண்பர் கனடாவில் இருக்கிறாராம், அவரின் மகனுடன் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. தன் தந்தை முட்டுக்கட்டை போட்டதால் தான் கவினை பிரிந்தார் லாஸ்லியா, எப்படியாவது இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தற்போது லாஸ்லியாவின் திருமணச் செய்தி.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus