தன் காதலியின் பிறந்த நாளை க்யூட்டாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் முகேன்!

  • December 1, 2020 / 01:21 PM IST

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் வெற்றி பெற்றதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் முகேன்.

மலேசியாவை பூர்வீகமாக கொண்ட முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றது மட்டுமல்லாமல் பாடகராகவும் சிங்கிள் பாடல்களை வெளியிட்டு புகழ் அடைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கூட தனது கம்போசிங்கில் வெளியான “என்ன மறந்த” என்ற பாடலை பாடி புகழ்பெற்றார். அழகான குரலுக்கு சொந்தக்காரரான முகேனுக்கு நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற “வெப்பம்” திரைப்படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகான் இயக்கத்தில் விரைவில் முகேன் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனக்கு ஒரு பெண்ணை பிடிக்கும் என்றும், விரைவில் அவரைப் பற்றி வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து டைட்டிலை வென்ற முகேன் வெளியானவுடன் தன்னுடைய காதலியின் பிறந்த நாளன்று, பிரபல மாடல் யாஸ்மின் நாடியா தான் தன் காதலி என்பதை வெளிப்படுத்தினார்.

இது தொடர்ந்து சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடிய காதலிக்கு அருகில் இருந்து சிறப்பாக கொண்டாட முடியாததால், வீடியோகால் மூலம் கொண்டாடி அந்த பதிவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். க்யூட்டாக இவர்கள் பிறந்தநாளை கொண்டாடிய விதம் பலரை கவர்ந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus