உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பங்கேற்பாளர் ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
எப்படி இருந்த ஜூலி இப்படி ஆகிட்டாரே என்று அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் நடந்த பொழுது இணையதளம் முழுவதும் வைரலாக பேசப்பட்ட பெண் ஜூலி, பின்பு 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளே வந்தார்.
தொடர்ந்து வந்த சர்ச்சையான விஷயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய ஜூலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி வந்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிக் பாஸ் ஜூலி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அம்மன் தாயி, அனிதா பயோபிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஸ்ரீக் இயக்கத்தில் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்” நடித்துவருகிறார்.
விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டு மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் ஜூலி, தற்போது முகத்தில் கோல்டன் மற்றும் கருப்பு சாயங்களுடன் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு புதிய புரட்சி செய்து வருகிறார்.
https://www.instagram.com/p/CFOp2kRhmN6/?igshid=sj3holcs9120
https://www.instagram.com/p/CFOp2kRhmN6/?igshid=1w5tvj0h2zbli
https://www.instagram.com/p/CFL49PNhCVg/?igshid=17gjgivaz0ss4
https://www.instagram.com/p/CFL49PNhCVg/?igshid=1ufm9t6mqu813
https://www.instagram.com/p/CFJaPoxheci/?igshid=iten5m2ca2ua
https://www.instagram.com/p/CFJaPoxheci/?igshid=1pf3tiejktn84
https://www.instagram.com/p/CFGjq7LhfcX/?igshid=18cp7hozmbmsb