பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு வந்த அதிர்ஷ்டம் – கூரையை பிச்சிகிட்டு கொட்டுதாம்!

  • September 17, 2020 / 11:00 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்கள் பட்டியல் ஏராளம். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமான ஒருவர்தான் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். மாடலிங் துறையில் ஜொலித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிவி ஆங்கரிங் செய்ய தொடங்கினார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் கதவை தட்டி வருகிறது. இந்நிலையில் லாக்டவுனில் மற்ற நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவது போன்று இவரும் போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு மறைமுகமாக கவினை தாக்கியும் வருகிறார். நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது காதலித்தார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

வெளியே வளர்ந்ததும் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இதனால் தான் அவர் தனது கேப்ஷனில் அவரைத் தாக்கி வருவதாகவும் ரசிகர்கள் கோவமாக உள்ளார்கள்.

இந்நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஏற்கனவே நடித்து வரும் லாஸ்லியா மேலும் 2 படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தன் சொந்த ஊரில் இப்பொழுதே சொத்துக்கள் வாங்கி குவிக்க தொடங்கி விட்டாராம் லாஸ்லியா. அதிர்ஷ்டம் வரும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus