பிக்பாஸ் முகேன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் வெற்றி பெற்றதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் முகேன்.

மலேசியாவை பூர்வீகமாக கொண்ட முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றது மட்டுமல்லாமல் பாடகராகவும் சிங்கிள் பாடல்களை வெளியிட்டு புகழ் அடைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கூட தனது கம்போசிங்கில் வெளியான “என்ன மறந்த” என்ற பாடலை பாடி புகழ்பெற்றார். அழகான குரலுக்கு சொந்தக்காரரான முகேனுக்கு நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற “வெப்பம்” திரைப்படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகான் இயக்கத்தில் விரைவில் முகேன் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சீரடி ப்ரொடக்ஷன் நிறுவனம் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிகர் முகேன் நடிப்பில் எந்திரன் படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு ஒளிப்பதிவில் விரைவில் திரைப்படம் வெளியாகவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அனுகீர்த்திவாஸ் இந்த படத்தில் முகேனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு “வெற்றி” என்று பெயரிட்டுள்ளார்கள்.

Share.