பிக்பாஸ் முகேன் தனது காதலியுடன் ரொமான்டிக்காக கொண்டாடிய பர்த்டே வீடியோ!

  • October 23, 2020 / 12:14 AM IST

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் வெற்றி பெற்றதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் முகேன்.

மலேசியாவை பூர்வீகமாக கொண்ட முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றது மட்டுமல்லாமல் பாடகராகவும் சிங்கிள் பாடல்களை வெளியிட்டு புகழ் அடைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கூட தனது கம்போசிங்கில் வெளியான “என்ன மறந்த” என்ற பாடலை பாடி புகழ்பெற்றார். அழகான குரலுக்கு சொந்தக்காரரான முகேனுக்கு நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற “வெப்பம்” திரைப்படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகான் இயக்கத்தில் விரைவில் முகேன் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

தற்போது தனது காதலியான யாஸ்மின் நாடியாவுடன் முகேன் தனது பிறந்தநாளை கொண்டாடி ரொமான்டிக்கான புகைப்படத்தை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். எவ்வளவு அழகான ஜோடி பொருத்தம் என்று அனைவரும் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இதில் முகேனின் காதலி இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து பெரிய பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus