பிக்பாஸ் முகேனின் திரைப்படம் குறித்த அறிக்கை!

  • September 24, 2020 / 10:30 PM IST

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் வெற்றி பெற்றதன் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் முகேன்.

மலேசியாவை பூர்வீகமாக கொண்ட முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றது மட்டுமல்லாமல் பாடகராகவும் சிங்கிள் பாடல்களை வெளியிட்டு புகழ் அடைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கூட தனது கம்போசிங்கில் வெளியான “என்ன மறந்த” என்ற பாடலை பாடி புகழ்பெற்றார். அழகான குரலுக்கு சொந்தக்காரரான முகேனுக்கு நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற “வெப்பம்” திரைப்படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகான் இயக்கத்தில் விரைவில் முகேன் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சீரடி ப்ரொடக்ஷன் நிறுவனம் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிகர் முகேன் நடிப்பில் எந்திரன் படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு ஒளிப்பதிவில் விரைவில் புரடக்ஷன் நம்பர் ஒன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அனுகீர்த்திவாஸ் இந்த படத்தில் முகேனுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus