2005 ஆம் ஆண்டு டி.வி.சந்திரன் இயக்கத்தில் வெளியான ஆடும் கூத்து என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர்.
இந்தப் படத்தை தொடர்ந்து ரெட்டைச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா, உன்னோடு கா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
தற்போது “அலேக்கா” மற்றும் “எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்” போன்ற படங்களில் நடித்துவந்த ஆரி, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஒரு பங்கேற்பாளர்.
சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், சினிமா பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் ட்ரெய்னராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நதியா என்பவரை திருமணம் செய்து கொண்டு, இப்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.
அதுமட்டுமின்றி இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவர் இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒருமுறை ஒரு வெள்ளை போர்டில் அதிகமாக கையொப்பமிட்டததற்கும், மற்றொரு முறை சுமார் 3000 மாணவர்களுடன் சீட்லிங்ஸ் டிரான்ஸ்பிளாண்டிங் செய்ததற்கும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மேலும் முன்னேற்றப்பாதையில் இளைய தலைமுறையை வழி நடத்தியதற்காக டிரைகோனா அவார்ட்ஸ் வழங்கும் “யூத் ஐகான்” என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தற்போது பிக்பாஸில் நடிகர் ஆரியை குறி வைத்து அனைத்து ஹவுஸ் மேட்களும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பங்கேற்பாளர் பாலா ஒரு காரணமாக உள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டு இருந்தாலும் தற்போது மன உளைச்சலில் இருக்கிறார் ஆரி. இந்த நேரத்தில் இவருக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது. இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.