இதுவரை யாரும் பார்த்திராத “பிக்பாஸ் 4” சம்யுக்தா கார்த்தியின் அரிய புகைப்பட தொகுப்பு

  • October 13, 2020 / 07:24 PM IST

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் யார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பலரும் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரபலத்தின் பெயரை வெளியிட்டு வந்தார்கள்.

மொத்தம் 105 நாட்கள் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியது. இதில் 16 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, நடிகர் பாலாஜி முருகதாஸ், நடிகை சிவானி நாராயணன், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், பாடகர் வேல்முருகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா, நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை சமயுக்தா கார்த்திக், நடிகை ரம்யா பாண்டியன, சூப்பர் சிங்கர் ஆஜித் உள்ளிட்ட 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

சம்யுக்தா கார்த்திக் என்றழைக்கப்படும் சம்யுக்தா சண்முகநாதன் ராதிகா சரத்குமாரின் “சந்திரகுமாரி” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். இவர் ஒரு நடன கலைஞர் மற்றும் நியூட்ரிஷனிஸ்ட். ஏற்கனவே பல வருடங்களாக மாடலிங் துறையில் புகழ்பெற்று விளங்குபவர். 36 வயதான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். மலையாளத்தில் ஷாஜி என் கருண் இயக்கத்தில் உருவான “ஓளூ” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக உருவெடுத்த இவர், தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளர். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் களமிறங்கியுள்ள சம்யுக்தா 2007ம் ஆண்டு “மிஸ் சென்னை” பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு ஐடி துறையில் சில வருடங்கள் பணி புரிந்தார். பெண் மாடலாக இருந்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus