பிக்பாஸ்4 புகழ் சோமசேகர் தனுஷ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா!?

  • December 5, 2020 / 09:46 AM IST

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிக்பாஸ் 4 வீட்டிற்குள் பத்தாவது பங்கேற்பாளராக நுழைந்தவர் தான் இந்த மாடல் சோமசேகர். இதற்கு முன் இவர் என்ன செய்தார் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் இவர் பிரபல மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் என்றும், ஏற்கனவே விஜய் டிவியில் 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான “அழகிய தமிழ்மகன்” நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டியாளர் என்பதும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி பல அட்வர்டைஸ்மென்ட்களிலும் இவர் மாடலாக வந்திருக்கிறாராம். முன்னேறத் துடிக்கும் இந்த புது முகத்திற்கு தற்போது வயது 30. சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, செம ஸ்மார்ட்டாக இருக்கும் சோமசுந்தருக்கு விரைவில் பெண்கள் ஆர்மி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸில் இருக்கும் இவர் ஏற்கனவே தனுஷின் “பவர் பாண்டி” திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தற்போது வெளியாகியுள்ள சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus