எம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை!
January 22, 2021 / 03:31 PM IST
|Follow Us
தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது. இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தின் அசத்தலான அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘பிகில்’ படம் மூலம் ஃபேமஸான நடிகை அம்ரிதா ஐயர் டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ஆனந்த ராஜ், ரேஷ்மா, டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். இந்த தகவலை நடிகை ரேஷ்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸையும் ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.