தமிழ் திரைப்படவுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “பிகில்”.
இந்த திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்த நடிகை காயத்ரி ரெட்டி, தற்போது “பிக்பாஸ்” புகழ் கவின் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கவின் இதற்குமுன் சிவா அரவிந்த் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான “நட்புனா என்னனு தெரியுமா” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.
இவர் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் “லிஃப்ட்”. அறிமுக இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் கவின் ஜோடியாக “படைவீரன்” பட நாயகி அமிர்தா ஐயர் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் லாக்டவுன் நாட்களுக்கு முன்னரே நடந்தி முடிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு காயத்ரி ரெட்டி கவினுடன் வேலை செய்தது நல்ல அனுபவம் என்றும், அவர் பெரிய மனதுடையவர் என்றும் கூறியிருக்கிறார்.மேலும் லிஃப்ட் திரில்லர் மிஸ்ட்ரி திரைப்படம் என்றும் கூறியிருக்கிறார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.