சிறந்த பெண் பைக் ரேசர் என்று மக்களால் போற்றப்படுபவர் அலிஷா அப்துல்லா. இவர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “இரும்புக்குதிரை” திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா காரணமாக அனைவரும் லாக்டவுனில் வீட்டுக்குள் இருக்கும் இந்த நேரத்தில் அலிஷா அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடம் பதிவிட்டு வருகிறார்.
இவர் பைக் ரேசர் என்பதால் நடிகர் அஜித் பைக் ரேசர் என்பதால் இருவரும் நண்பர்களாக உள்ளார்கள். தற்போது அலிஷா அப்துல்லா அஜித் மற்றும் தனக்கு உடனான உறவை தவறாக சித்தரிக்கிறார்கள் என்று ஆவேச பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவர்களைப் பற்றி ஒரு வீடியோவில் பேசி பதிவிட்டுள்ளார், அந்த வீடியோவை கண்டித்து தற்போது அலிஷா கோவமாக பதிவிட்டுள்ளார்.
I will not tolerate such nonsense.. how can @KumudamReporter #kumudam Spk such crap.. spoiling such a big stars name Mr Ajith sir.. and dragging me into this gossip! Pls stop all this! Stop Spoiling names like this #AjithKumar #stoprumour pic.twitter.com/GRxFPCB2QR
— Dr. Alisha Abdullah (@alishaabdullah) July 17, 2020
அலிஷா அப்துல்லாவிற்கு சமீபத்தில் தமிழ்நாடு மனித நல உரிமை வாரியத்தில் வேலை கிடைத்தது. இது குறித்து பேசிய பயில்வான், வேலை கிடைத்ததும் நேராக அலிஷா அஜித்தை தான் சந்தித்தார் என்றும், அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று உங்களால் தான் எனக்கு இந்த வேலை கிடைத்தது என்று கூறினார் என்றும் இவர் சொல்லியிருந்தார்.
இதற்கு அலிஷா ” இதுபோன்ற தேவையில்லாத கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். குமுதம் ரிப்போர்ட்டர் எப்படி இப்படி பேசலாம்? இவ்வளவு பெரிய நடிகரான அஜித்தின் பெயரை கெடுப்பது மிகப்பெரிய தவறு. இதை உடனடியாக நிறுத்துங்கள். இந்தமாதிரி தவறான கிசுகிசுக்களை பரப்பாதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகர் அஜித் கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் அஜித் வினோத் இயக்கத்தில் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹுமா குரைஷி நடிக்கிறாராம். லாக்டவுன் முடிந்ததும் மீதமுள்ள படப்பிடிப்புகள் நடைபெறும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.