நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .
ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . ஆரம்பித்தில் நல்ல வசூலை பெற்று வந்த வாரிசு படம் படிப்படியாக வசூலில் குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது . இந்நிலையில் வாரிசு படத்தை பார்த்த சிலர் படம் சீரியல் மாதிரி இருக்கு என்று கருத்து தெரிவித்து இருந்தனர் .
இது பற்றி வம்ஷியிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது இதற்கு மிகவும் கோபமாக பதில் அளித்துள்ளார் வம்ஷி . து எப்படி இப்படி சொல்லலாம் நாங்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்து வருகிறோம் இந்த படத்தின் பெரிய நடிகர் விஜய் பல தியாகங்களை செய்து நடித்திருக்கிறார். படத்தில் நிறைய மனிதர்கள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படி கூறுவது தவறு என கூறியிருக்கிறார்.
விமர்சனத்தை ஏற்க முடியமால் வம்ஷி கோபப்பட்டு பேசியதை பலரும் விமர்சித்து வருகிறார் . குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் வம்சியை தொடர்ந்து விமர்சித்து ட்வீட் செய்து வருகிறார் .