தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம்.
இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் ‘மொய்தீன் பாய்’ என்று அறிவித்ததுடன், அவரின் கேரக்டர் போஸ்டரையும் லைகா நிறுவனம் நேற்று முன் தினம் ட்விட்டரில் வெளியிட்டிருந்தது.
தற்போது, யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸான ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஏண்டா இது ஒரிஜினல் போஸ்டர்னு சொல்ல மாட்டீங்களா.. ரெண்டு நாளா இது எவனோ ட்ரோல் பண்றதுக்கு போட்டதுனு நினைச்சு போயிட்டு இருக்கேன். போஸ்டருக்கு கூட தலைவர் தேறமாட்டார் போலயே… இவனுக எத நம்பி படத்தை எடுக்குறானுங்க” என்று பதிவிட்டுள்ளார்.