‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • December 10, 2021 / 06:18 PM IST

யூ டியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். இப்போது இவரும் வெள்ளித்திரையில் என்ட்ரியாகியுள்ளார். இவர் இயக்கியிருக்கும் முதல் படமான ‘ஆன்டி இண்டியன்’ (Anti Indian) இன்று (டிசம்பர் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியதுடன் ‘ப்ளூ சட்டை’ மாறனே இசை அமைத்திருக்கிறாராம். இதில் ‘ப்ளூ சட்டை’ மாறனுடன் இணைந்து ராதாரவி, ‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன், முத்துராமன் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

இதனை ‘மூன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், வீரமணி கணேஷன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus