இதுவரை யாரும் பார்த்திராத பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • June 29, 2023 / 12:08 PM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இப்போது இவர் நடிப்பில் ‘ப்ராஜெக்ட் K, செக்சன் 84’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் ‘ப்ராஜெக்ட் K’ படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகுகிறது.

இதில் ஹீரோவாக பிரபாஸும், வில்லனாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும் நடிக்கிறார்கள். சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகும் இப்படத்தின் கதைக்களம் 2050-ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாகுமாம்.

‘செக்சன் 84’ (ஹிந்தி) படத்தை இயக்குநர் ரிபு தாஸ்குப்தா இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அமிதாப் பச்சன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’-யில் முக்கிய ரோலில் நடிக்க ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வந்தது.

இந்த படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் அமிதாப் பச்சனின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus