ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒப்பந்தமான பாலிவுட் நடிகர்!

  • April 26, 2023 / 03:29 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படமான ‘கேம் சேஞ்சர்’-ல் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்து வரும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி நடிகர் ராம் சரணின் பர்த்டே ஸ்பெஷலாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் வெலவை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஹாரி ஜோஷ் கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus