பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘பதான், டன்கி, ஜவான்’ என மூன்று ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘பதான்’ படம் இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 25-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
‘ஜவான்’ படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்த படத்தை வருகிற ஜூன் 2-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.6300 கோடி என தகவல் கிடைத்துள்ளது.